அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் இருந்து 250 கிராம் கொக்கைன் பாக்கெட் வாங்கியதாக நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், “அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் கைதானதற்கு முன்புதான் அவரிடம் 250 கிராம் கொக்கைன் பாக்கெட் வாங்கினேன்”, என்று கூறியுள்ளார்.

மேலும், அவரிடம் இருந்து வாங்கியதை வைத்து கடந்த சனிக்கிழமை இரவு நுங்கம்பாக்கம் வீட்டில் கொக்கைன் பார்ட்டி நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“பிரசாத்தை மட்டுமே எனக்குத் தெரியும். அவர் என்னை வைத்து படம் தயாரித்துள்ளார். எனக்குத் தர வேண்டிய ரூ.10 லட்சத்தை கேட்டபோது, கொக்கைன் கொடுத்து பழக வைத்தவர் பிரசாத்தான்.

பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்து பழக்கத்தை அதிகப்படுத்தியது அவர்தான்” என்று போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.

அதேவேளையில், தான் தவறு செய்துவிட்டதாகவும் தனது மகனை பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளதால் தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறும் எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மனு தாக்கல் செய்துள்ளார்.

போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது…