திருச்சி
நடிகர் சூரி தாம் இனிமேல் கதாநாயகனகவே நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘விடுதலை’ திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து விடுதலை படத்தில் இரண்டாவது பாகமான. விடுதலை 2 படத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
விடுதலை 2 திரைப்படத்தை திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகே உள்ள ஒரு திரையரங்கில் , நடிகர் சூர் பார்க்க வந்தபோது செய்தியாளர்களிடம்,
‘இந்தப் படத்தில் வாத்தியார் யார் என்பதை விரிவாக விளக்கும் காட்சிகள் உள்ளன. நானும் இப்படத்தில் முக்கியமான ரோலை செய்துள்ளேன். அடுத்தடுத்த படங்களில் கதையின் நாயகனாகவே எனது நடிப்பு பயணம் இருக்கும்
,நல்ல கதை அமைந்தால் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்து நடிக்கத் தயார்.ஆனால், அந்த படத்தில் யார் ஹீரோ என்பது சிவகார்த்திகேயன்தான் முடிவு செய்ய வேண்டும். எனக்கு எப்போதும் ஹீரோ எனது தம்பி சிவகார்த்திகேயன்தான்’
என்று கூறியுள்ளார்.