டிகர் சிவக்குமார் எழுதியுள்ள மகாபாரதம் நாவல், இத்தாலி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இத்தாலி மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரபல நடிகரான சிவகுமார் பன்முகத்தன்மை கொண்டவர். எழுத்தாளர், சொற்பொழிவாளர், ஓவியர் என்று பல திறமைகளை கொண்டுள்ள அவர், சமீபகாலமாக ஆன்மிக சொற்பொழிவு நடத்தி வருகிறார்.

இவர் ஏற்கனவே நான்  ராஜபாட்டை அல்ல  உள்பட பல புத்தகங்கள் எழுதியுள்ள நிலையில், மகாபாரதம் குறித்தும் தனது நடையில் எளிமையான முறையில் புத்தகம் எழுதியிருந்தார்.

இந்த புத்தகம் இத்தாலி மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட இருப்பதாக சிவகுமார் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தெரிவித்தார்.

அவர் பேசியதாவது, நான்  “மகாபாரதம் நாவலை பல ஆண்டுகளாக ஆராய்ந்து பல மேடைகளில் சொற்பொழிவு ஆற்றி உள்ளேன். அது டிவிடியாக விற்பனை ஆகி வருகிறது. இதுவரை சுமார் 1 லட்சத்திற்கும் மேல் டிவிடி விற்பனை ஆகி உள்ளது.

எனது மகாபாரதத்தை, பத்திரிகை ஒன்றில் பணி செய்து வந்த, மாருதி வெங்கடாசலம் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்திருந்தார். இந்நிலையில், குமார் என்பவர், தனது பேச்சை இத்தாலியில் மொழி பெயர்ப்பு செய்ய இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்.

ஆனால், நான் நம்பவில்லை. ஏதோ காமெடி செய்கிறார் என்று நினைத்தேன். ஆனால், 3 மாதத்தில் அவர் மொழி மாற்றம் செய்துவிட்டார். ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்ய 1 வருடத்திற்கு மேல் ஆனது. அதனால், இவர் இத்தாலி மொழியில் மாற்றம் செய்ய குறைந்தது 2 ஆண்டாவது ஆகும் என நினைத்தேன். ஆனால், அவர் 3 மாதத்தில் மொழி மாற்றம் செய்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

இவ்வளவு பெரிய காவியமான  மகாபாரதம் அது வேறொரு மொழியில் புத்தகங்களாக மாறி இத்தாலி செல்வதற்கு கண்டிப்பாக நான் உதவி செய்வேன். வாழ்க்கையின் முடிவில் தான் வரவு செலவு கணக்கு பார்க்க வேண்டும் என்று கண்ணதாசன் கூறியுள்ளார்.  நான் 75 % வாழ்கை வாழ்ந்துவிட்டேன். இன்னும் எத்தனை நாட்கள் இருக்க போகிறேன் என்று தெரியவில்லை. இப்போது வரவு செலவு கணக்கு பார்க்கலாம் என்று நினைக்கிறேன் என்றார்.

மேலும், தான் கோயம்புத்தூரில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்ததாக குறிப்பிட்ட அவர், அங்கு  குடிக்க தண்ணீர் கிடையாது , மின்சாரம் கிடையாது , கழிப்பிடம் கிடையாது , பள்ளிகூடம் கிடையாது , சாலைகள் கிடையாது. அந்த  கிராமத்தில் மொத்தத்தில் 200 பேர் தான்.  அந்த கிராமத்தில் இருந்து வெளிவந்த நான்தான் முதன்முதலாக எஸ்எஸ்எல்சி முடித்தவன் என்றார்.

ஒரு ஓவியனாகவே நான்  மெட்ராஸ் வந்தேன். ஓவியம் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக  சண்டிகர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு 7 வருடங்கள் நிறைய பயணங்களை மேற்கொண்டதாகவும்,  மகாபலிபுரம் குறித்த ஓவியம் வரைவதற்காக அங்கு தங்கியிருந்த போது, அங்கு   தங்குவதற்கு அறைகளோ,  எந்தொவொரு வசதிகளும் கிடையாது.

தெருவில் உள்ள குடிநீர் குழாய்களில் வரும் தண்ணீரை பயன்படுத்தியும், சைக்கிள் மூலமாகவும்தான் நிறைய இடங்களுக்கு செல்வதாகவும், 35 ரூபாய்  திருப்பதிக்கு சென்று அங்கு  7 நாட்கள் அங்கு தங்கி சில ஓவியங்களை வரைந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் தான், நாடகத்துறையில் புகுந்ததாகவும்,  இந்திய முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களையும் , பரதநாட்டியம் போன்ற நடன நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டதாக தெரிவித்த சிவகுமார்,  ராமாயணம் , மகாபாரதம் இந்தியாவின் அடையாளம் என்றார்.

ராமாயணத்தை கம்பர் எழுதியது அற்புதம் என்ற அவர, கம்பர் போன்று யாராலும் எழுதவே முடியாது என்றும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பே கம்பர் இவ்வளவு அழகாக  எழுதியுள்ளார் என்றும் கூறினார்.

ராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில்  நான் 5 பகுதியை எடுத்துரைத்துள்ளேன். எனக்கு இதற்கான  வசதியை ஏற்படுத்தி கொடுத்தற்கு கடவுள் தான் காரணம் என்றவர், நான் ஓவியனாக இருந்திருந்தால் திருவண்ணாமலை யில் தாடியுடன் கல்யாணம் ஆகாமல் இருந்திருக்க வாய்ப்புள்ளது என்றார்.

ஆனால் கடவுள் என்னை நடிகனாக மாற்றி கல்யாணம் செய்ய வாய்ப்பு கொடுத்து இரண்டு குழந்தைகளையும் கொடுத்துவிட்டார் என்று கூறினார்.

ராமாயணம் குறித்து எனது  இந்த புத்தகங்களுக்கு  பத்து லட்சம் ரூபாய் அளவுக்கு  செலவு பண்ணியிருக்கிறன் என்று நினைக்கிறேன். ஆனால், நான்  75 –வது ஆண்டை அடைந்ததற்கு, என்னுடைய மகன்கள்  50 லட்ச ரூபாய் செலவு செய்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் நான் ஓவியனாக இருந்திருந்தால் நடைபெற சாத்தியமில்லை என்ற அவர்,  தன்னை இதுபோன்ற நல்லதொரு நிலையில் வைத்துள்ள கடவுளுக்கு நன்றி”/

இவ்வாறு சிவகுமார் பேசினார்.