விதார்த், ரவீனா ரவி, ஜார்ஜ் மரியான் மற்றும் பல புதுமுக நடிகர்கள் நடிப்பில் உருவான படம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’.
அதற்குப் பிறகு மீண்டும் கிராமத்துப் பின்னணியில், முழுக்க காமெடி பாணியில் கதையொன்றைத் தயார் செய்தார் சுரேஷ் சங்கையா.
இதில் நாயகனாக பிரேம்ஜி நடித்துள்ளார். அவருடன் ஸ்வயம் சித்தா, ‘பிக் பாஸ்’ ரேஷ்மா, ஞானசம்பந்தம், கே.ஜி.மோகன், ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் லட்சுமி பாட்டி நடித்துள்ளார்.
இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சரண் ஆர்வி, எடிட்டராக வெங்கட் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். சமீர் பரத்ராம் தயாரித்துள்ளார்.


‘சத்திய சோதனை’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார் .