சென்னை; மறைந்த செவாலியே நடிகர் திலகம் சிவாஜியின் அன்னை இல்லத்தை ரத்து செய்ய உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டத.  நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் என சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சிவாஜி கணேசனின் மூத்த மகனான ராம்குமாரின் மகனான திஷந் ஜெகஜல கில்லாடி என்ற படத்திற்காக அவர் பெற்ற கடனை திருப்பி செலுத்துமாறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்கூதூர்,  இது தொடர்பாக நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, சிவாஜியின் சொத்துக்கள் பாகப்பிரிவினை செய்யப்பட்டு விட்டதாகவும், தற்போது சிவாஜி வாழ்ந்த சென்னை திநகர் வீடு, நடிகர் பிரபுவுக்கு மட்டுமே சொந்தம் என்று கூறப்பட்டது. மேலும்,  ஏற்கனவே வீட்டை உயில் மூலம் தனக்கு எழுதி வைத்து விட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் பிரபு என இருக்கையில், ராம்குமார் பெற்ற கடனுக்காக அன்னை இல்லத்தை எப்படி ஜப்தி செய்ய உத்தரவிடுவது என கேள்வி எழுப்பப்பட்டது.அதே போல் இந்த வீட்டிற்கும் தனக்கும் எந்த தொடர்பில்லை என்று ராம் குமாரும் பிராமண பத்திர மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று காலை நீதிபதி அப்துல் குதூர் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வீட்டை ஜப்தி செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் பிரபு தாக்கல் செய்த மனுவை ஏற்று உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து ஆணை பிறப்பித்தது.

நடிகர் பிரபுதான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் என்று கூறியதுடன்,  இந்த வில்லங்க பதிவில் நீதிமன்ற ஜப்தி உத்தரவை நீக்க பதிவுத்துறைக்கும், நீதிபதி உத்தரவிட்டார்.