சென்னை:
நடிகர் சிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படம் பிப்ரவரி 1ந்தேதி வெளியாக இருக்கும் நிலையில், தனத கட்அவுட்டுக்கு அண்டா அண்டாவில் பால் அபிசேகம் செய்யுங்கள் என்று சிம்பு வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதையேற்று, சிம்பு பேனருக்கு ரசிகர் ஒருவர் அண்டாவில் பால் ஊற்றினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், தான் சொன்னதன் அர்த்தம் வேறு என்று மன்னிப்பு கோரி உள்ளார் சிம்பு.
அண்டா அண்டாவாக பால் அபிஷேகம்.. நான் சொன்னதன் அர்த்தம் வேறு.. மன்னிப்பு கோரினார் சிம்பு
நடிகர் சிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் என திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், நடிகர் சிம்பு வெளியிட்ட முதல் வீடியோவில், யாரும் தனது பேனருக்கு பால் அபிசேகம் போன்றவை செய்ய வேண்டாம் என்றும், அந்த பணத்தில் உ ங்களது குடும்பத்தினருக்கு துணிமணி ஏதாவது வாங்கி கொடுங்கள் என்று கூறியிருந்தார். இதை ஒருசிலர் விமர்சித்த நிலையில், கடுப்பான சிம்பு மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், எனது திரைப்படம் வெளியாகும்போது இதுவரை இல்லாத அளவுக்கு பேனர் வையுங்கள். கட் அவுட்களுக்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள் என கூறியிருந்தார்.
இதற்கு சிலர் கண்டனம் தெரிவித்தனர். பால் முகவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், தற்போது தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டதாக கூறி வருத்தம் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் சிம்புவுக்கு கட்அவுட் வைத்து தவறி கீழே விழுந்த சென்னையை சேர்ந்த மதன் என்ற இளைஞர் இறந்தார். அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய சிம்பு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நான் எனது ரசிகர் உயிரிழந்ததால் வேதனையில் உள்ளேன். அதற்காக ஆறுதல் சொல்ல வந்தேன். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் மொழியை மறப்பதில்லை. பால் அபிஷேகம் செய்வதை நிறுத்துங்கள் என கூறிவருகிறேன். ஆனால் ரசிகர்கள் கேட்பதில்லை. மேலும் நான் அண்மையில் கூறியது எனது கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ய சொல்லவில்லை. மாறாக தியேட்டருக்கு படம் பார்க்க வருவோருக்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள் என்று கூறினேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
தனது செய்தி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பாலாபிஷேகம் செய்யாதீர் என பாசிட்டிவாக சொன்னால் ரசிகர்கள் கேட்பதில்லை. அதனால் நெகட்டிவாக பேசினால்தான் அதிக பேரை சென்றடையும் என்பதால் கிண்டலாக கூறினேன். ஆனால், அது ரசிகர்களை சென்றடையாமல் போய்விட்டது. நான் நெகட்டிவாக கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நான் கூறியதன் அர்த்தம் வேறு. எனினும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.