வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.
இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகர் சிம்புவுக்கு திடீரென வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள சிம்புவுக்கு கொரோனா இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இருந்தபோதும், இது சாதாரண காய்ச்சலா என்பது குறித்து எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.
சிம்பு நடித்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரித்த ‘மாநாடு’ படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]