நடிகர் சித்தார்த் வித்தியாசமானவர். கடந்த வருட வெள்ளத்தின்போது நேரடியாக களத்தில் இறங்கி மக்களுக்கு உதவினார்.
அதே போல, தவறு கண்டால் பொங்கும் மனது உடையவர்.
அப்படித்தான் ஒரு விளம்பரத்தைக் கண்டு தனது அறச்சீற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்தி நடிகர் ரன்வீர் சிங் ஒரு சட்டைக்கான விளம்பரப்படத்தில் நடித்தார்.
அதில், “வேலையை வீட்டுக்கே எடுத்து செல்லுங்கள்” என்று சொல்லி, வேலைக்கு வந்த ஒரு பெண்ணை தன் தோளில் போட்டு எடுத்து செல்வது போல ஒரு காட்சி. அதை ஸ்டில்லாகவும் மும்பை முழுக்க வைத்திருக்கிறார்கள்.

இதைப் பார்த்து கோபமான சித்தார்த், “ வேலைக்குச் செல்லும் பெண்களை இப்படியா கேவலப்படுத்துவது..” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
திரைத்துறையில் இருந்தாலும், இயல்பான மனிதர்தான் சித்தார்த்.
Patrikai.com official YouTube Channel