நடிகர் அஜித் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலித்தாவுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்த போது அவருடன் சில காவல் அதிகாரிகள் மற்றும் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர் அதை பார்த்த சிலர் கிண்டல் செய்ய தொடங்கினர்.
மறைந்த முதல்வருக்காக பல்கேரியாவிலுருந்து அவர் மீது வைத்திருந்த மிகுந்த மரியாதைக்காக உடனடியாக சென்னை வந்த அஜித் விமான நிலையத்திலிருந்து நேரடியாக அவரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின்னர் சில ரசிகர்கள் கேட்டுக்கொண்டதால் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனை பலர் சமூக வலைதளங்கலில் தொடர்ந்து கிண்டல் செய்ததால் அவர்களுக்கு நடிகர் சாந்தனு டுவிட்டரில் பதிலளித்துள்ளார் அவர் அதில் கூறியதாவது :-
“கிண்டலை நிருத்திக்கொள்ளுங்கள் விமான நிலையத்திலிருந்து முதல்வரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேராக சென்றதை மரியாதையுடன் பாருங்கள்.
அவர் இதயபூர்வமாக நடப்பவர் என்பதை இதன் மூலம் நிருபித்துள்ளார். ரசிகர்கள் கேட்டுக்கொண்டதால் புகைப்படம் எடுக்க அனுமதித்துள்ளார். வெளிதோற்றத்தில் சிரிப்பதும், அழுவதும் அப்படியே மனதின் உள்ளேயும் இருக்கும் என அர்த்தமில்லை.” என தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
Pls stop trolling ! Respect that he went straight from airport to #Amma 's burial ground ! That shows he's true from the bottom of his heart https://t.co/bVbPt9Bowu
— Shanthnu (@imKBRshanthnu) December 7, 2016