சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு மரியாதை செய்த சசிகலா, விரைவில் தொண்டர்களை சந்திப்பேன் என்று கூறினார்.
இந்த நிலையில், சசிகலாவை நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் சென்னை திநகர் இல்லத்தில் திடீரென சென்று சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக கூட்டணி உள்ள நடிகர் சரத்குமார், சசிகலாவை சந்தித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
சசிகலாவுடனான சந்திப்பு முடிந்து செய்தியாளர்களை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ராதிகா சரத்குமார், “ஜெயலலிதா பிறந்தநாளன்று நாங்கள் சின்னம்மாவை சந்தித்துள்ளோம். புரட்சித்தலைவியின் உடன்பிறவா சகோதரி என்று தான் எனக்கு சசிகலாவை தெரியும். அந்த சகோதரியை நாங்கள் இன்று பார்க்க வந்துள்ளோம் . அவரது உடல் நலத்தைப் பற்றி இன்று விசாரிக்க வந்தோம் ” என்றார்.
தொடர்ந்து பேசிய நடிகர் சரத்குமார், “நன்றி மறப்பது நன்றன்று.. என்ற அடிப்படையில் சசிகலாவை சந்திக்க வந்தேன்; உடல்நலம் பற்றி விசாரித்தேன் ” என்றார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்று சமத்துவ மக்கள் கட்சிக்கு, வர இருக்கிற சட்டமன்ற தேர்தலில் அதிக இடம் ஒதுக்க வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தி வருகிறார். தனது மனைவி ராதிகாவையும் சட்டமன்ற தேர்தலில் கறமிறக்க உள்ளார். இதனால், அதிக தொகுதிகள் கேட்டு வருகிறார். இது தொடர்பாக ஏற்கனவே செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், இரண்டுக்கு கீழ் தொகுதிகளை வழங்கும் கட்சியுடன் எல்லாம் வரும் தேர்தலில் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று அதிரடியாக சரத்குமார், சசிகலாவை சந்தித்து பேசியிருப்பது, அதிமுகவுடன் சரத்குமார் கட்சி கூட்டணி அமைக்க மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.