தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு ரூ.1 லட்சம் பரிசு: நடிகர் ரோபோ சங்கர் (வீடியோ)

Must read

சென்னை:

சிய தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தை பெற்று தந்த தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு, ரோபோ சங்கர் ரூ. ஒரு லட்சம் பரிசு அறிவித்துள்ளார். அது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

தோகாவில் நடைபெற்ற 23-வது ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தைச் சோ்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து தரப்பினரும், வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் பிரபல நடிகர் ரோபோ சங்கர், கோமதிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்குவதாக  அறிவித்துள்ளார்.

கோமதி மாரிமுத்து திருச்சியை சேர்ந்த முடிகண்டம் பகுதியை சேர்ந்தவர். போட்டியின்போது  மின்னல் வேகத்தில் ஓடிய கோமதி, சக வீராங்கனைகளை பின்னுக்குத்தள்ளி பந்தய இலக்கை  2 நிமிடம் 2.70 விநாடிகளில்  முதலிடம் பிடித்தார்.

More articles

Latest article