வில்லன் நடிகர் காதலியை மணக்கிறார்.. சினிமா பாணியில் மண்டபம் செட் தயாராகிறது..

Must read

பிரபாஸ் அனுஷ்கா நடிக்க ராஜமவுலி இயக்கிய ’பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்தவர் ராணா. இவர் தனது காதலி மிஹீகா பஜாஜ் என்பவரை திருமண்ம் செய்கிறார். கொரோனா ஊரடங்கால் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த முடியவில்லை. திருமண மண்டபங்களும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் திருமணத்துக்காக சினிமா பாணியில் திருமண மண்டப அரங்கு அமைக்கப்படுகிறது,


ஐதராபாத்தில் உள்ள ராமாநாயுடு  ஸ்டுடியோவில் இதற்காக அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது. அதில் நாளை மறுதினம் 8ம் தேதி மதியம் 2 மணி அளவில் திருமணம் நடக்க உள்ளது. திருமண விழாவில் நாகார்ஜுனா, அமலா. சமந்தா, நாக சைதன்யா, அகில் உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்கின்றனர்.
கொரோனா ஊரடங்கு விதிமுறைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விருந்தினர்கள் மட்டுமே விழாவில் கலந்து கொள்கின்றனர்.
கடந்த மாதம் நடிகர் நிதின், ஷாலினி திருமணமும் கொரோனா ஊரடங்கால் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்க எளிமையாக நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது

More articles

Latest article