சென்னை
நடிகர் ரஜினிகாந்த் இந்திய ராணுவத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

நேற்று இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த தாக்குதல்கள் முடிவுக்கு வந்தது. ஆயினும், இந்திய எல்லை பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இன்று நடிகர் ரஜினிகாந்த் கேரளாவிற்கு படப்பிடிப்பிற்கு செல்வதற்காக சென்னை வி்மான நிலையத்திற்கு வந்த போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்
அப்போது ரஜினிகாந்த்,
:பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு பாராட்டுகள். போரை வலிமையாக, திறமையாக கையாண்ட பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருக்கும் எனது வாழ்த்துகள்”.
எனத் தெரிவித்துள்ளார் .
Patrikai.com official YouTube Channel