சென்னை: கமலை பற்றி தரக்குறைவாக பேசவில்லை, அவர் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது என்று ராகவா லாரன்ஸ் கூறி இருக்கிறார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ரஜினியின் தர்பார் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில், நடிகர் கமல் பற்றி தவறாக பேசியதாக தகவல்கள் வெளியாகின.

இந் நிலையில், தமது பேச்சு குறித்து, ராகவா லாரன்ஸ் விளக்கமளித்துளார். தமது டுவிட்டர் பக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு கடிதத்தை எழுதி பதிவிட்டு உள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: கமல் சினிமா போஸ்டர் மீது சாணி அடித்தது பற்றி நான் பேசியதை சிலர் மிகைப்படுத்தி வருகின்றனர். நான் ஆரம்பம் முதலே ரஜினி ரசிகன்.

சிறு வயதில் அதி தீவிர ரஜினி ரசிகனாக இருந்த போது என்னையும் அறியாமல் கமலுக்கு எதிரான அதை செய்தேன். கமல் மீது அதிக மரியாதை கொண்டவன் நான்.

உண்மையில் நான் தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்பேன். ஆனால் இந்த விவகாரத்தில் நான் தவறாகவே பேசவில்லை. நான் பேசிய வீடியோவை முழுமையாக பேசினால் தெரியும். என்னை நான் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பதிவுடன், நிகழ்ச்சியில் பேசிய வீடியோவையும் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார். அவரின் இந்த விளக்க பதிவு இணையத்தில் வைரலாகி உள்ளது.

[youtube-feed feed=1]