ஐதராபாத்
நடிகர் பிரபாஸ் தன்னுடன் நடிக்கும் நடிகை தீபிகா படுகோனேவுக்கு தடபுடல் விருந்து கொடுத்து அசத்தி உள்ளார்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே நடிக்கும் மூன்று மொழி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
நேற்று முன் தினம் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் நடிக்க ஐதராபாத் வந்துள்ள நடிகை தீபிகா படுகோனேவுக்கு ஆந்திர சிறப்பு உணவு வகைகள் கொண்ட தடபுடல் விருந்துக்கு பிரபாஸ் ஏற்பாடு செய்துள்ளார். பிரபாஸ் வீட்டில் இருந்து படப்பிடிப்பு தளத்துக்கு பல வகையான உணவுகள் வந்துள்ளன.
பிரபாஸ் தனது கதாநாயகிகளுக்கு இதுபோல விருந்து அளிப்பது முதல் முறை இல்லை. ஏற்கனவே சாஹோ படப்பிடிப்பின் போது ஸ்ரத்தா கபூருக்கு விருந்து அளித்துள்ளார். அத்துடன் சலார் படப்பிடிப்பின் போது நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு தடபுடல் விருந்து அளித்து சிறப்பித்துள்ளார்.
[youtube-feed feed=1]