பழம்பெரும் நடிகர் பீலிசிவம் காலமானார்

சென்னை:

பழம்பெரும் நடிகர் பீலிசிவம் உடல்நலக் குறைவால் காலமானார், அவருக்கு வயது 79 பி.எல்.சின்னப்பன் என்ற நடிகர் பீலி சிவம் 1938ம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி பிறந்தார்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையிலும், சின்னத்திரையிலும் நடித்து வந்தார். 1995ம் ஆண்டு தமிழக அரசு நாடகத்துறையில் இவருக்கு சிறந்த நடிகருக்கான கலைமாமணி விருது வழங்கியது.

குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த இவர் இன்று மதுரையில் காலமானார். அவருக்கு திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: actor Peli sivam passed away, பழம்பெரும் நடிகர் பீலிசிவம் காலமானார்
-=-