போதை மருந்து விவகாரத்தில் தெலுங்கு நடிகர் நந்துவிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், போதை மருந்து விற்பனை செய்யும் கெல்வின் வீட்டிலும் 4 மணி நேரம் சோதனை நடத்தினர்.

இவர்தான் எஃப்கிளப் நடத்துவது என்பதால், இவரையும், போதை மருந்து விற்பனையாளரான அப்ரூவர் கெல்வினையும் ஒரே சமயத்தில் ஆஜர்படுத்தி இருவரிடமும் சரமாரியாக கேள்விகளை கேட்டனர்.

கெல்வினின் வீட்டில் அமலாக்கப்பிரிவினர் நடத்தின சோதனையில் அவரது வீட்டில் இருந்த சிலஆவணங்கள், லேப்டாப் போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதில் இருந்த தகவலின்படி ஒருவரை அமலாக்கப்பிரி வினர் நேற்று ஹைதராபாத்தில் கைது செய்தனர். இவர் கெல்வினின் உதவியாளர் என கூறப்படுகிறது.