சென்னை: கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்து வந்த  நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்கும் நிலையில், தலைநகர் சென்னையில், போதை பொருள் நடமாட்டமும் தீவிரமாக உள்ளது. அரசியல் கட்சியை சார்ந்தவர்களே கஞ்சா உள்பட போதை பொருள் விற்பனையை செய்து  வருவதால், காவல்துறை  அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதில் தயக்கம்  காட்டி வருகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரிடமும் கஞ்சா உள்பட போதை பொருள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில், கஞ்சா விற்பனை தொடர்பான புகாரின் பேரில் காவல்துறையினர் சிலரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து சில கஞ்சா வியாபாரிகளும்  கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போனில் இருந்து எடுக்கப்பட்ட  தகவல்களைத் தொடர்ந்து, பலரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேரை ஜெ.ஜெ.நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

இதைத்தொடர்ந்து,  ஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக நடிகர் மன்சூர் அலிகான்  மகன்  துக்ளக் உள்பட4 பேரை பிடித்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்  மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக், செயது சாகி, மொஹம்மது ரியாஸ் அலி, பைசல் அஹமது ஆகியோர்.