சென்னை
பிரபல நடிகரும் நாடாளும் மக்கள் கட்சித் தலைவருமான கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல நடிகரான கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் ஆவார். நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அவர் தேர்தல் பிரசாரம் தொடங்க இருந்த போது கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
உடல் நலம் தேறிய கார்த்திக் பிறகு ஒரு சில இடங்களில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். நேற்று மாலை அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதை அடுத்து அவர் அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில் கொரோனா பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்துள்ளது. அவர் தொடர்ந்து மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.