சென்னை,
நாடு முழுவதும் ஜூலை 1ந்தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்த இருப்பதால், கேரளாவில் தற்போது விதிக்கப்பட்டு வரும் பொழுதுபோக்கு வரியான 25 சதவிகித வரியை நீக்கி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் சினிமா டிக்கெட் கட்டணத்தில் 25% பொழுதுபோக்கு வரி தற்போது அமலில் உள்ளது. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பில், சினிமாவுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த 25 சதவிகித கேளிக்கை வரியை கேரள அரசு ரத்து கேரள நிதியமைச்சர் டி.எம். தாமஸ் ஐசாக் தெரிவித்துள்ளார்.
கேரள அமைச்சரின் அறிவிப்புக்கு கேரளா திரையுலகினர் வரவேற்றுள்ள நிலையில், நடிகர் கமலஹாசனும் தனது டுவிட்டர் செய்தில் கேரள அரசின் முடிவு சரியானது என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.