பெங்களூரு: நடிகர் கமல்ஹாசனுக்கு கன்னடத்தின் பண்டைய வரலாறு தெரியாது என கர்நாடக மாநில காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தக் லைப் (Thug Life) பட விழாவில் தமிழிலிருந்து கன்னடம் பிறந்ததாக நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு, கர்நாடக மாநிலம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இதற்கு மன்னிப்பு கோர முடியாது என்று தெரிவித்த கமல்ஹாசன், அரசியல்வாதிகள் மொழியைப் பற்றி பேச தகுதியற்றவர்கள் என்றும் மேலும் காட்டமாக பதில் தெரிவித்திருந்தார்.
அரசியல்வாதிகள் மொழி குறித்து பேச தகுதியற்றவர்கள் என கூறியது தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக இந்த விவகாரம் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கருத்துக்கள் பல கன்னட ஆதரவு அமைப்புகளிடையே சீற்றத்தைத் தூண்டியுள்ளன. பெங்களூரில் தக் லைப் பட போஸ்டர்கள் கன்னட அமைப்பினரால் கிழிக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் பெலகாவி, மைசூர் ஹூப்பள்ளி, பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஹாசனுக்கு எதிராக போராட்டங்களை நடத்தின. வேறு சில இடங்களில் கமல்ஹாசனின் சுவரொட்டிகளை எரித்து, அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
நடிகர்-அரசியல்வாதியின் அறிக்கையைக் கண்டித்து, அவர் மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டக் காரர்கள் கோரினர். அவர் மன்னிப்பு கேட்கத் தவறினால், அவரது ‘தக் லைஃப்’ திரைப்படத்தை மாநிலத்தில் திரையிடுவதைத் தடுப்போம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகாவை அவமதித்தால் கமல்ஹாசனின் படங்களுக்கு தடை விதிக்கப்படும்” என்றும், “கர்நாடகாவிற்கும் அதன் மக்களுக்கும் எதிராகப் பேசினால், உங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும்” என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சில கன்னட அமைப்புகள் கமல்ஹாசனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன.
பெங்களூருவில் தக் லைப் பட பேனர்கள், போஸ்டர்கள் கன்னடர்களால் கிழிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கர்நாடகாவில் தக் லைப் படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் கன்னட அமைப்பினர் வலியுறுத்தி வருவதால், 300 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள தக் லைஃப் படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் கமல்ஹாசனுக்கு கன்னட மொழி குறித்த வரலாறு தெரியாது. கன்னடமொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. அது கமலுக்கு தெரியவில்லை. வரலாறு தெரியாமல் கமல் பேசுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் மொழியைப் பற்றி பேச தகுதியற்றவர்கள்! கன்னடனர்களுக்கு கமல்ஹாசன் பதில்….