தமிழ்சினிமாவின் சாபக்கேடு என்றால் அது திருட்டு விசிடி, ஆன்லைன் பைரசி இவைகள் தான் எந்த திரைப்படம் வெளியானாலும் அந்த திரைப்படம் திரையரங்குகளில் உள்ளதோ இல்லையோ ஆனால் இவர்களின் இணையதளங்களில் மட்டும் நிச்சயம் இருக்கும். அந்த அளவுக்கு இவர்களின் செல்வாக்கு வளர்ந்துள்ளது.
இப்படி இருக்கும் போது யார் இந்த கும்பலுக்கு எதிராக போராடுவது என்று எல்லோரும் கேட்கும் போது சில காலங்களாக நடிகர் விஷால் திருட்டு வி.சி.டி. விற்கும் கடைகளை சூரையாடி வருகின்றார், இவரை தவிற வேறு யாரும் அந்த அளவுக்கு களத்தில் இறங்கி வேலை செய்வதில்லை.
இந்த நிலையில் விஜய்யின் மக்கள் இயக்கம் கடலூரை சேர்ந்தவர்கள் தொடரி, ஆண்டவன் கட்டளை, ஆகிய படங்களை திருட்டுத்தனமாக விற்றுக்கொண்டிருந்தவர்களை பிடித்து போலிஸில் ஒப்படைத்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் அவர்கள் ஆன்லைனில் படங்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக ஒரு புகாரையும், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதை கண்ட நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய் மக்கள் இயக்கம் உறுப்பினர்களுக்கு மிக்க நன்றி என கூறியுள்ளார்.
Sincere thanks to Vijay sir’s fan club association members for filing a complaint against piracy. #godbless #spreadlove
— Dhanush (@dhanushkraja) September 28, 2016
பாராட்ட வேண்டிய விஷயங்களை பாராட்டித்தானே ஆக வேண்டும்.