‘ஸ்டார் வார்ஸ்’ படங்களில் டார்த் வேடார் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் டேவிட் ப்ரவுஸ் காலமானார். அவருக்கு வயது 85.
உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
பாடி பில்டிங், எடை தூக்குதல் உள்ளிட்ட விளையாட்டுகளில் போட்டியிட்டவர் ப்ரவுஸ். 6 அடி 7 அங்குல உயரத்தில் இருந்த ப்ரவுஸ், டார்த் வேடார் என்கிற நிகரில்லாத வில்லன் கதாபாத்திரத்துக்கு அப்படியே பொருந்திப் போனார்.
‘தி செய்ண்ட்’, ‘ஸ்பேஸ் 1999’, ‘டாக்டர் வூ’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்த பிரவுஸ் தனது இறுதிக் காலத்தை லண்டனில் கழித்து வந்தார்.