மதுரை:

தனுஷ் உடலில் இருந்த அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கதிரேசன், மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று உரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். தனுஷ் உடலில் இருக்கும் அங்க அடையாளங்களை தம்பதியர் சமர்ப்பித்திருந்தனர். இந்த வகையில் தனுஷ் நேரில் வரவழைக்கப்பட்டு மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி அறையில் வைத்து தனுஷூக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனையில் அறிக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை இன்று திறக்கப்பட்டது. அறிக்கையில், தனுஷ் உடலில் இருந்த அங்க அடையாளங்கள் ரேசர் கருவி மூலம் அழிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இதன் மீதான விரிவான விசாரணை வரும் 27ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நடிகர் தனுஷ் தனது பெற்றோருடன் – உரிமைகோரும் மதுரை தம்பதி

தங்களை பெற்றோர் என்று தனுஷ் ஏற்றுக் கொண்டால் போதுமானது என்ற தம்பதியர் தெரிவித்தனர். இந்த வழக்கில் நாங்கள் வெற்றி பெறுவோம என்று தனுஷ் தரப்பினர் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தனுஷூக்கு பின்னடைவை ஏற்படுத்தம் வகையில் மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.