சென்னை: பிரபல நடிகர் தனுஷ், தனது இரு மகன்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று இன்று காலை மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தமிழ்நாட்டின் பிரபல நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷ் ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் கொண்டவர். இவர் தற்போது  தனது மனைவியை பிரிந்து தனது குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார்.  சிவபக்தரான தனுஷ் தன்னுடைய தகவகல்கள் தொடர்பாக வெளியிடப்படும் அறிக்கைகளில் ஓம் நமச்சிவாய என மறக்காமல் குறிப்பிடுவது அவரது வழக்கம்.  மேலும், அவ்வப்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருவார்.

தனுஷ் இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களை நடித்துள்ள நிலையில்,   அவரது 50வது படத்துக்கு ‘D50’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  இதை தனுஷே இயக்கி நடிக்க முடிவு செய்துள்ளார.  இதற்கிடையில்,  இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவும் திட்டமிட்டு உள்ளார்.

இந்த நிலையில்  தனுஷ் இன்று அதிகாலை  தன்னுடைய அம்மா, அப்பா மற்றும் தன்னுடைய இரண்டு மகன்கள் ஆகியோருடன் திருப்பதிக்குச் சென்று மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்திருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன