சிவில் சர்விஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பிரபல தமிழ் நடிகர் மகன்

Must read

சென்னை

பிரபல தமிழ் நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75 ஆவதாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

சென்ற ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியானது.

இந்த தேர்வில் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் அகில இந்திய அளவில் முதலாவதாக பிரதீப் சிங் என்பவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் என்பவர் தேர்ச்சி பெற்றவர்களில் ஒருவர் ஆவார்.

இவர் அகில இந்திய அளவில் 75 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் தமக்கு எதிர்காலம் குறித்து முடிவு செய்யப் பெற்றோர் முழு சுதந்திரம் அளித்ததாகத் தெரிவித்துள்ளார்

மேலும், தாம் தமிழ்க கல்வி, சுற்றுச்சூழல், தொழிலவளத்தில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரித்துள்ளார்.

More articles

Latest article