நடிகர் போண்டாமணிக்கு முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் சிகிச்சை! அமைச்சர் மா.சு தகவல்..

Must read

சென்னை: சிறுநீரக பாதிப்பு காரணமாக, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நகைச்சுவை நடிகர் போண்டா மணியை இன்று சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் போண்டாமணி அவர்களை சந்தித்து அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்ததாகவும், அவருக்கான  முழு செலவையும் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுதிட்டத்தின் மூலம் ஏற்ககப்படும் என உறுதியளிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நகைச்சுவை நடிகர் போண்டா மணி, சென்னை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இரு சிறுநீரகமும் செயலிழந்து உள்ளதாக கூறப்படுகிறது.  அவருக்கு உதவ சக நடிகரான பெஞ்சமின் வீடியோ மூலம் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் மா.சு. மருத்துவமனைக்கு சென்று அவரை சந்தித்து பேசியதுடன், அவர் சிகிச்சைச்சான முழு செலவும் முதல்வர் காப்பீடு திட்டத்தின் மூலம் ஏற்கப்படும் என உறுதி அளித்தார்.

More articles

Latest article