நடிகை  பாவனா – நவீன் திருமணம் திருச்சூரில் நடந்தது

Must read

 

 

திருச்சூர்:

டிகை பாவனா – நவீன் திருமணம் இன்று திருச்சூரில் நடந்தது.

மலையாள நடிகையான பாவனா, தமிழ்ப்படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். இவர் கடந்த ஐந்து வருடங்களாக கன்னட பட தயாரிப்பாளர் நவீனை காதலித்து வந்தார்.

இரு வீட்டார் சம்மதத்துடன், அவர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேரளாவில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிகழ்வுக்கு  நடிகை மஞ்சு வாரியர் உள்பட 16 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். அன்று திருமண நாளும் குறிக்கப்பட்டது.

ஆனால் இடையில் நடந்த சில விரும்பத்தகாத சம்பவங்களால் பாவனா, மனம் சோர்வுற்றார். இதையடுத்து திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. இடையிடையே திருமணம் குறித்த தகவல்கள் பரவின. அவற்றை பாவனா மறுத்து வந்தார்.

இந்த நிலையில் கேரளாவின் திருச்சூரில் உள்ள திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணா திருக்கோவிலில் நடிகை பாவனா, நவீன் திருமணம் இந்து முறைப்படி நடந்தது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை லூலு கன்வென்ஷன் ஹாலில் நடக்கும் என கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article