அதர்வா தம்பி நடிகர் விஜய் உறவுப்பெண் திருமணம் நடந்தது..

Must read

றைந்த பிரபல நடிகர் முரளியின் முத்த மகன் அதர்வா, இளைய மகன் ஆகாஷ். வெளிநாட்டில் படித்தபோது சினேகா பிரிட்டோவுடன் ஆகாஷூக்கு காதல் மலர்ந்தது. சினேகா பிரிட்டோ நடிகர் விஜய்யின் உறவுப் பெண். சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தையும் இயக்கி இருக் கிறார். சினேகா. இவரது தந்தை சேவியர் பிரிட்டோ நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை தயாரித்திருக்கிறார்.
ஆகாஷ், சினேகா பிரிட்டோ திருமணம் கொரொனா ஊரடங்கில் ஆரவாரம் இல்லாமல் சென்னை அடுத்துள்ள திருக்கழுகுன்றத்தில் நடந்தது. கொரோனா வழிகாட்டு முறைகளுடன் திருமணம் நடத்தப்பட்டது உறவுனர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.


திருமணம் பற்றி நடிகர் அதர்வா, தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ கூறும்போது,’மனம் நிறைந்த மகிழ்வுடன் இச்செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் இல்ல திருமண நிகழ்வு அனைவர் ஆசிர்வாதத்தில் நண்பர்கள், நெருங்கிய சொந்தங்கள் சூழ, இனிதாக நடந்து முடிந்தது. இந்நிகழ்வை இன்னும் பிரமாண்டமாக காலத்தின் மறக்க முடியாத, இரு குடும்பங்களின் கொண் டாட்ட நிகழ்வாக உங்கள் எல்லோரையும் அழைத்து நடத்தவே ஆசைப்பட்டோம். தற்போதைய உலக சூழ்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு குடும்ப சொந்தங்கள் மட்டுமே, பங்கேற்று நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால் மிக விரைவில் நிலைமை சரியானவுடனே திரையுலக நண்பர்கள், ஊடக நண்பர்கள், நலன் விரும்பிகள் என அனைவரையும் அழைத்து ஒரு பிரமாண்ட வரவேற்பு விழாவை திட்டமிட்டுள்ளோம்.
திருமண பந்தத்தில் இணைந்து பயணிக்கும் எங்கள் இல்ல வாரிசுகளை அனைவரும் ஆசிர்வதிக்க வேண்டுகிறோம் என்று கூறி உள்ளார்.

More articles

Latest article