தமிழகத்தில் கடந்த 78 நாட்களுக்கு பிறகு முதல்முறையாக இன்று சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மார்ச் மாதம் 5 ம் தேதி 3994 பேர் சிகிச்சை பெற்று வந்தனர், மறுநாள் 6ம் தேதி 3992 பேர் சிகிச்சை பெற்று வந்தனர், 7 ம் தேதி 3997 ஆக உயர ஆரம்பித்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து தற்போது 3,12,386 ஆக உள்ளது.

இந்த மாத துவக்கத்தில் 1,17,405 ஆக இருந்த சிகிச்சை பெறுவோர் என்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து நேற்று 3,13,048 என்று அனைவரையும் கிடுகிடுக்கவைத்தது.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மூன்று மாதங்களுக்கு பிறகு நேற்றைவிட 662 குறைந்துள்ளது சற்று ஆறுதலாக உள்ளது.

1,75,542 பேருக்கு இன்று பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 31,079 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இது மொத்த பரிசோதனையில் 18.8 சதவீதமாகும், இதுவரை 20.3 சதமாக இருந்த பாதிப்பு அளவு தற்போது குறைந்திருக்கிறது.