சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ராத்தூர் மாற்றப்பட்ட புதிய ஆணையராக அருண் ஐ.பி.எஸ். பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையின் முக்கியப் பகுதியான பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த படுகொலை சம்பவம் பழிவாங்கும் நோக்கில் நடைபெற்றதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சென்னையின் ரௌடிகளின் அட்டகாசத்தை ஒடுக்கத் தவறியதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ராத்தூர் மீது புகார் எழுந்தது.

இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ராத்தூர் இன்று இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக அருண் ஐ.பி.எஸ். சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல் ஆணையராக பொறுப்பேற்ற அருண் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் ரௌடியிசத்தை ஒழிக்க ரவுடிகளுக்கு தெரிந்த மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும், சென்னை தனக்கு புதிதல்ல என்று கூறிய அருண் சென்னையின் பல்வேறு மண்டலங்களில் துணை மற்றும் இணை ஆணையராக பணியாற்றிய அனுபவம் தனக்கு இருப்பதாகத் தெரிவித்தார்.