சென்னை: ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி போர்க்கொடி தூக்கி உள்ளது. இதுதொடர்பாக மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
திமுக அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பன் மீது ஊழல் புகார்கள் உள்பட சாதிய வன்கொடுமை புகார்களும் எழுந்துள்ளது. இதையடுத்து அவர் இலாகா மாற்றம் செய்யப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். இது சலலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், சாதிய குறித்து தன்னை விமர்சித்ததாக முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியை சந்தித்தும் மனு கொடுத்துள்ளார். இதனால், அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது தீண்டாமை சட்டம், வன்கொடுமை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மதுரையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது மாநில மாநாட்டில் கலந்துகொண்ட மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் மீண்டும் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதி ரீதியாக நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது, அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசியவர், அரசு அதிகாரிகளுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களுக்கு என்ன நிலை உருவாகும் என்றவர், பாஜகவுக்கு எதிரான திமுகவின் போராட்டத்துக்கு ஆதரவாக அரசியல் நட்பு ரீதியாக நாங்கள் துணை நிற்போம் எனவும், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை களுக்காக தொடர்ந்து போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.