சென்னை: 18வயதுக்கு கீழ் உள்ள மாணவர்கள், இளைஞருகுளு இனு பைக் ரேசில் ஈடுபட்டால், அவர்களின்  பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பைக் ரேஸில் ஈடுபடுவது வாடிக்கை யாகி வருகிறது. இரவு நேரங்களில் பைக் ரேஸ் மற்றும் பைக் வீலிங்கில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. சாலைகளில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்குவோர் மீது வழக்கு பதிவுசெய்து, கைது செய்துகொண்டிருக்கிறது காவல்துறை.

இதனால் பலர் உயிரிழப்பதுடன், நெடுஞ்சாலைகளில் மற்றவர்களின் விபத்துகளுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. இதனால், பைக் ரேஸில் ஈடுபடுபவர்களை கண்காணித்து, காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும் நள்ளிரவில் பைக் ரேஸில் நடைபெறுவது தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை கண்காணித்து வரும் காவல்துறையினர், சென்னையில் ஆறு பேரை கைதுசெய்துள்ளனர். வில்லிவாக்கம் ரயில்வே மேம்பாலம் அருகே, கோயம் பேடு 100 அடி சாலையில், நியூ ஆவடி சாலையில், மீனம்பாக்கம் அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைதுசெய்திருக்கின்றனர். மேலும், அவர்களிடமிருந்த விலையுயர்ந்த பைக்குகளை அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல, சென்னை பாண்டிபஜார், ராயபுரம் பகுதிகளில் பைக் ரேஸில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்களையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

இதையடுத்து, 18 வயதாகாத சிறுவர்கள் இரு சக்கர வாகனத்தை இயக்காமல் அவர்களின் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்’ என்றும், இனிமேல் இதுபோன்று பைக் ரேஸில் சிறுவர்கள் ஈடுபட்டால், அவர்களின் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  காவல்துறை யினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.