சென்னை:
பணிக்கு உரிய நேரத்தில் வராத மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில். பணிக்கு உரிய நேரத்தில் வராத மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், பாம்பு கடி மற்றும் நாய் கடி மருந்து இருப்பு நிலவரம் குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel