நாடு முழுவதும் 1,400 ஐ.ஏ.எஸ், 900 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலி

Must read

டில்லி,

நாடு முழுவதும் 1,400 ஐ.ஏ.எஸ் மற்றும் 900 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இன்று மக்களவையின் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் இந்த தகவலை கூறி உள்ளார்.

நாடு முழுவதிற்கும், 6,396 ஐஏஎஸ் பணி யிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன ஆனால், அதில், 4,926 பணி யிடங்களில் மட்டுமே ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணிபுரிந்து வரு கிறார்கள்.  மீதமுள்ள 1,470 பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறியுள்ளார்.

அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 128 ஐ.ஏ.எஸ் பணியிடங்களும், உத்திரப்பிரதேச மாநிலத்தில் 117 ஐ.ஏ.எஸ் பணியிடங்களும், மேற்கு வங்க மாநிலத்தில் 101 ஐ.ஏ.எஸ் பணியிடங்களும் காலியாக உள்ளதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுமைக்கும் 4,802 ஐ.பி.எஸ் பணியிடங்களில் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 3,894 ஐ.பி.எஸ் பணியிடங்களில் மட்டுமே அதிகாரிகள் உள்ளனர். மீதமுள்ள 908 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதில் அதிகபட்சமாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் 114 ஐ.பி.எஸ் பணியிடங்களும், மேற்கு வங்கத் மாநிலதில் 99 ஐ.பி.எஸ் பணியிடங்களும் , ஒடிசா மாநிலத்தில் 79 ஐ.பி.எஸ் பணியிடங்களும் , கர்நாடக மாநிலத்தில் 72 ஐ.பி.எஸ் பணியிடங்களும், பீகார் மாநிலத்தில் 42 ஐ.பி.எஸ் பணியிடங்களும் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது தவிர மொத்தமுள்ள 3,157 ஐ.எப்.எஸ் பணியிடங்களில் 2,597 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளது. 560 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 46 பணியிடங்களும், மத்திய பிரதேசம், தமிழகம் மற்றும் ஒடிசாவில் தலா 45 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

1 COMMENT

Latest article