மதுரை: அவசர தேவை என கூறி பொதுமக்களின் நிலத்தை அரசு கையகப்படுத்துவது தவறு என மதுரை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது மாநில அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூரில் விமான படை பயிற்சி தளம் அமைப்பதற்காக அரசு அங்குள்ள பொதுமக்களின் விவசாய நிலங்களை கையப்படுத்தியது. இத எதை எதிர்த்தும், தங்களுக்கு மாற்றம் நிலம் வழங்க வேண்டும் என்றும் நிலத்தை கொடுத்தவர்கள் தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தர் – ஸ்ரீமதி அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது கருத்து தெரிவத்த நீதிபதிகள், ‘ உரிய முறைப்படி பல ஆண்டுகளாக வசித்து வரும் பொதுமக்களின் நிலங்களை அவசரகால உத்தரவு என கூறி அவர்களின் நிலங்களை அரசு கையகப்படுத்துவது தவறு.’ என கருத்து தெரிவித்துள்ளது.
மனுதாரர் தரப்பில், அவசரகால உத்தரவு நிலங்களை கையகப்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுபோல சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்குத் தேவையான 4,700 ஏக்கர் நிலத்தில், அரசுக்கு சொந்தமான 2,400 ஏக்கர் நிலம் போக மீதமுள்ள 2,300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தி.மு.க. அரசு முடிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடுகளை மட்டுமல்லாமல் விளை நிலங்களையும் இழந்து, அவர்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழக அரசு, அவகால உத்தரவு மூலம் நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. இந்த நிலையில், உயர்நீதிமன்றம் மதுரைகிளையின் நீதிமன்றத்தின் கருத்து, அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.