சேலம்:  சேலம் அருகே 2 மூதாட்டிகள் கொலை  செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளி என கருதப்படும்ஒருவர்  காவல்துறையினரால் காலில் சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டு மூதாட்டிகளை கொலை செய்து கல்குவாரியில் வீசிவிட்டு சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த சம்பவத்தின்போது காவலர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக,   சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள தூதனூா், காட்டுவளவு பகுதியில் உள்ள கல்குவாரி நீரில்  அப்பகுதியைச் சோ்ந்த பெரியம்மா (75), பாவாயியின் (70) சடலங்கள் மீட்கப்பட்டன. அவா்கள் அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன. அவர்களை மீட்ட காவல்துறையினர், இருவரும் கொலை செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அவர்கள் இருவரும் ஆடு மேய்க்கும் கூலி தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்,  இந்த இரட்டை கொலை சம்பவத்தில் கொலையாளிகளைப் பிடிக்க சேலம் மாவட்ட எஸ்பி (பொ) விமலா உத்தரவின்பேரில் சேலம் காவல் துணை கண்காணிப்பாளா் சோமசுந்தரம் தலைமையில் ஆய்வாளா்கள் செந்தில்குமாா் (மகுடஞ்சாவடி), ரமேஷ் (சங்ககிரி), சண்முகம் (தம்மம்பட்டி) ஆகியோரைக் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனப்படை போலீசார் அந்த பகுதிகளில் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், இரு மூதாட்டிகள் கொலையில் தொடா்பு உள்ளதாக சந்தேகிக்கும் கருப்பூா், வெள்ளாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த அய்யனாா் என்பவரைத் தேடி வந்தனர்.  மேலும், அநத்பகுதிகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகான  இளம்பிள்ளை, இடங்கணசாலை, கே.கே.நகா் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வந்தனர் .

இந்த நிலையில், சங்ககிரி அருகே உள்ள ஒருக்காமலை பகுதியில் குற்றவாளி அய்யனார் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் தலைமை காவலர்கள் அழகு முத்து, கார்த்திகேயன் ஆகியோர் குற்றவாளி பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது குற்றவாளி அய்யனார் காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது. ஒரு போலீசாரை கத்தியால் குத்திவித்து தப்பிக்க முயற்சி செய்த நிலையில், காவல் ஆய்வாளர் செந்தில்குமார் துப்பாக்கியால் சுட்டதில் அய்யனார் காலில் குண்டு பயந்தது. உடனடியாக போலீசார் அவரை மடக்கி பிடித்து சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதித்தார்.

இப்போது மேல் சிகிச்சைக்காக குற்றவாளி அய்யனாரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அளித்து சென்று உள்ளனர். இந்த சம்பவம் குறித்து சங்ககிரி உதவி ஆய்வாளர் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.