சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 படுகாயம்…!

Must read

சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 படுகாயம் அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் குருமூர்த்தி நாயக்கன் பட்டியை சேர்ந்த வீராச்சாமி, முத்துலாபுரம் நடராஜன், ஆமத்தூர் புது ராஜா உள்ளிட்ட 4 பேர் 100 சதவீத காயமடைந்தனர்.

அவர்கள் 4 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்படுகிறது. 4 பேருக்கும் தீக்காயம் அதிகமாக உள்ளதால் மேல்சிகிச்சைக்காக  மதுரைக்கு அழைத்து செல்லப்படலாம் என்று தெரிகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் நடைபெறும் 5வது வெடி விபத்து இதுவாகும். ஒரு மாதத்தில் நடைபெற்ற விபத்தில் இதுவரை 31 பேர் உயிழந்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article