அகமதாபாத்:
குஜராத்தில் யுனிவர்சிட்டி சிறந்து விளங்க வேண்டும் என்று மத்தியஅரசு விரும்புவதாக ஜேஎன்யு கொரியன் ஆய்வு மையத் தலைவர் தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநில பல்கலைக்கழகம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயலாற்றி வருகிறது. இந்த நிலையில், ஜேடிஎன்யு வைப் போல உடன் இணைந்து குஜராத் பல்கலைக்கழகமும் சிறந்து விளக்க வேண்டும் என்று பல்வேறு பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்கு நேற்று நடைபெற்ற கொரிய ஆய்வு மையம் தொடக்க விழா நடைபெற்றது.
முன்னதாக கடந்த ஆண்டு பிரதமர் மோடியும், கொரிய ஜனாதிபதி மூன் ஜேவும் சந்தித்து பேசியபோது, குஜராத்திலும், புத்த பிக்குகள் வாழ்ந்தது குறித்து பேசியதாகவும், அதைத்தொடர்ந்து குஜராத்தில், புத்த சர்க்கிள் ஒன்றை உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், குஜராத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கொரியன் ஆய்வு மைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஜேஎன்யு கொரிய ஆய்வு மையத்தின் தலைவர் ரவிகேஷ் மிஸ்ரா, குஜராத் பல்கலைக்கழகத்தை சிறந்த பல்கலைக்கழகமாக மாற்ற மத்திய அரசு முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார்.
ஜே.என்.யுவில் உள்ள கொரிய ஆய்வுகளுக்கான மையம் 1995 முதல் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பை நடத்தி வருகிறது, கடந்த ஆண்டு இந்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, கொரிய குடியரசின் தலைவர்கள் குஜராத் யுனிவர்சிட்டிக்கு வந்து சந்தித்தபோது சிம்போசியம் குறித்த யோசனை வந்ததாகவும், அதைத்தொடர்ந்து, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரியா குடியரசின் கல்வி அமைச்சின் கீழ் உள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனமான அகாடமி ஆஃப் கொரிய ஆய்வுகள், அதன் சர்வதேச சிம்போசியம் – கொரியா-இந்தியா கூட்டாண்மை, கடந்த கால, தற்போதைய மற்றும் எதிர்காலத்திற்கான கூட்டுறவு நிகழ்ச்சியை நடத்தியதாகவும் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்தே எங்கள் பல்கலைக்கழகம் கூட்டாக ஒரு சிம்போசியம் நடத்த முன்வந்தது, அத்துடன், கொரிய கலாச்சார மற்றும் கல்வி நடவடிக்கைகளை குஜராத்துக்கு கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டது என்று மிஸ்ரா விளக்கினார்.
கொரிய அதிகாரிகள், குஜராத் மத்திய பல்கலைக்கழகத்திலோ அல்லது வேறு எந்த பல்கலைக்கழகத்திலோ அவர்கள் சிம்போசியத்தை நடத்த ஆர்வமாக உள்ளனர் என்று கூறியவர், குஜராத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிம்போசியத்தை நடத்துவதில் ஆர்வமாக இருந்ததால், இந்த சிம்போசியம் இங்கு நடத்தப்படுவதாகவும் கூறினார்.
ஜே.என்.யுவின் கொரிய ஆய்வுகளுக்கான மையத்தில், சுமார் 150 மாணவர்கள் இந்த பாடத்திட்டத் தில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற இந்த சிம்போசியத்தின் தொடக்க விழாவில், கொரிய ஆய்வுகள் அகாடமியின் தலைவர் அஹ்ன் பியுங்-ஓக், கொரியா குடியரசின் தூதர் ஷின் போங்க்கில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வி-சி ஹிமான்ஷு பாண்ட்யா, கொரிய ஆய்வுகள் மற்றும் கொரிய ஆராய்ச்சி மையத்தை பல்கலைக்கழகத்தில் தொடங்கி வைத்தார்.