சென்னை:

செங்கல்பட்டு வரை இயக்கப்படும் புறநகர் ரயில்களுடன் ஏசி ரயிலையும் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

தற்போது, ​​சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்) மூலம் மாநில அரசு நகரின் தெற்குப் பகுதியில் உள்ள சென்னை விமான நிலையம் வரை ஏசி மெட்ரோ ரயில் சேவைகளை இயக்குகிறது. இதற்கு ஜிஎஸ்டி சாலையில் விமான நிலையத்திற்கு அப்பால் உள்ள பகுதிகள், குரோம்பேட்டை, தம்பரம், வண்டலூர், கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு போன்ற பகுதிகளில்   வசிக்கும் நடுத்தர வர்க்க மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயிலை இயக்க நடடிவக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது ஏர்போர்ட் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில், ஏற்கனவே  புழக்கத்தில் இருந்து சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டு வழித்தடத்துடன் இணைக்கப்பட்டு,  மெட்ரோ ரயில் இயக்குவது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே உடன் மெட்ரோ ரயில்வே  விரைவில் உடன்படிக்கை செய்யும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளைடைவில், ஒவ்வொரு ஐந்து அல்லது ஏழு நிமிடங்களுக்கும் ஏர் கண்டிஷனிங் புறநகர் ரயில்களை இயக்குவதற்கு தற்போதுள்ள கடற்கரை-தம்பரம்-செங்கல் பட்டு  பிரிவில் ஒரு தனி ரயில் பாதையை  உருவாக்கவும் திட்டம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஐதராபாத்தில் இதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளதால், விரைவில் சென்னையிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை  12 பெட்டிகள் கொண்ட ஏசி ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக கடந்த மே மாதம் அறிவித்தது. அதன்படி,  முதல்கட்டமாக சென்னை கடற்கரை முதல் செங்கல் பட்டு வரை இந்த ரயில் இயக்கப்பட இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால், இதற்கான கட்டணம் சற்று கூடுதலாக இருக்கும் என கூறப்படுகிறது.