டில்லி

டில்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் தலைவர் உட்பட 3 பதவிகளை ஆர் எஸ் எஸ் மாணவர் அணி இழந்துள்ளது.

டில்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஆர் எஸ் எஸ் மற்றும் பா ஜ க மாணவர் அணியான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், மற்றும் காங்கிரஸ் ஆதரவு பெற்ற இந்திய தேசிய மாணவர் அணி ஆகிய இரு அணிகள் போட்டி இட்டன.  இதில் செயலாளர் பதவி மட்டுமே பா ஜ  மாணவர் அணிக்கு கிடைத்துள்ளது.  தலைவர் உட்பட மூன்று பதவிகள் தேசிய மாணவர் அணிக்கு கிடைத்துள்ளது.

போன வருடம் பா ஜ மாணவர் அணி தலைவர், உப தலைவர், செயலாளர் ஆகிய மூன்று பதவியிலும் வெற்றி பெற்றது.  அப்போது இணை செயலாளர் பதவி காங்கிரஸ் அணி கைப்பற்றியது.