புவனேஷ்வர்:
பிரதமர் மோடியும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் தன்னை தவறாகப் பேசியதை சிறந்த பரிசாக கருதுவதாக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் அறிவிஜீவிகள் மத்தியில் கலந்துரையாடியபோது அவர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் என்னை எவ்வளவோ தவறாகப் பேசியிருக்கிறார்கள். அவர்களது இத்தகைய பேச்சை சிறந்த பரிசாகவே நினைத்திருக்கின்றேன்.
என்னை தவறாகப் பேசிய பிரதமர் மோடியைப் பார்த்தபேகாது, அவரை கட்டித் தழுவ வேண்டும் போல் இருந்தது. பிரதமர் காங்கிரஸ் மீது அதிருப்தியடைந்திருக்கிறார். நாங்கள் ஒருபோதும் அவர்களிடம் கோபப்பட்டதில்லை. இது எங்கள் குணம். நாங்கள் யாரையும் வெறுப்பதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Patrikai.com official YouTube Channel