சென்னை:

மிழகத்தில் கூட்டுறவு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முறைகேடு புகார் காரணமாக 21 கூட்டு றவு சங்கங்களுக்கான தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும்  கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 213ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற நிலையில், தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்க தேர்தல்களின் உறுப்பினர்கள் பதவியை பிடிக்க அரசியல் கட்சியினரிடையே பெரும் போட்டி நிலவி வருகிறது.

இதன் காரணமாக  தமிழகத்திலுள்ள  18 ஆயிரத்து 775 சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள்  தேர்வு செய்வதற்கான தேர்தல்களுக்கான உத்தரவை தமிழ்நாடு கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சங்கங்களுக்கு மார்ச் 26 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 -ஆம் தேதி வரை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கூட்டுறவு தேர்தலில் முறைகேடு நடப்பதாக வந்த புகாரை அடுத்து தமிழகத்தில் 21 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ரத்து செய்து தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடப்பதாக 31 சங்கங்கள் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.