டில்லி:

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்து உள்ளார். தேர்தல் நன்னடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

ஏப்ரல் 11ந்தேதி தொடங்கும் முதல்கட்ட தேர்தல் மே 8ந்தேதி முடிவடைகிறது. வாக்கு எண்ணிக்கை 23ந்தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாகவும், இதற்காக 10 லட்சம் பூத்துகள் அமைக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தெரிவித்து உள்ளார்.

மேலும்மக்கள் அச்சமின்றி வாக்களிக்க சிஆர்பிஎப் வீரர்கள், பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிப்பார்கள் என்ற சுனில் அரோரா, தேர்தலுக்காக நாடு முழுவதும் 10 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட இருப்பதாகவும் கூறினார்.

இந்த முறை தேர்தல் ஆணையம் தரும் பூத் சிலிபை மட்டுமே வைத்து வாக்களிக்க முடியாது என்றவர், அத்துடன் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட நிர்ணயிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றை கட்டாயம் காட்டி வாக்களிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இந்த முறை,  தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபாட் எந்திரம் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த முறை தேர்தலில் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருப்பதாக கூறியவர், இவர்களில்  ஒன்றரை கோடி பேர் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் என்றும், இந்த ஆண்டு புதிதாக 8.43 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த தேர்தலில் 15 கோடி புதிய வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். அதுபோல,  23 மாநிலங்களில் 100% வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு இருக்கிறது வேட்புமனு தாக்கல் நடைபெறும் கடைசி நாள்வரை வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் நடைபெறும் என்றும் கூறினார்.

மேலும்,  கடந்த தேர்தலில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளே இப்போதும் கடைபிடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.