திருவண்ணாமலை:

பெட்டிக்கடை நடத்தி வந்து, அதற்குள் சொகுசு கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த திருவண்ணா மலை தம்பதி கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அவர்கள் சுமார் 10 ஆண்டுகளாக சட்ட விரோத கருக்கலைப்பு செய்து வந்ததாகவும், இதுவரை 4ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கருக்கலைப்பு செய்துள்ள அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

திருவண்ணாமலை அருகே உள்ள அவலூர்பேட்டை கிரிவலப்பாதையில் உள்ள பரபரப்பான பெட்டிக்கடை ஒன்று செயல்பட்டு வந்தது. பெட்டிக்கடையில் உள்ள பாதை வழியாக பல பெண்கள் அடிக்கடி சென்று வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில், அங்குள்ள லாடாவரம் பகுதியை சேர்ந்த சுமதி என்பவர் அங்கு கருவை கலைத்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டருக்கு தகவல் கிடைத்தது அவர் சுகாதாரத்துறைக்கும், காவல்துறையினருக் கும் உத்தரவிட்டதை தொடர்ந்து, அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்பட்டு வந்த மருந்துகள் மற்றும் கருக்கலைப்புக்குத் தேவையான உபகரணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவற்றை போலீஸார் கைப்பற்றினார். அந்த தம்பதியிடம் நடத்திய விசாரணையில் கடந்த 10 ஆண்டுகளாக கருக்கலைப்பு செய்து வந்ததாகவும், தினமும் 3 அல்லது 4 பேர் கருக்கலைப்பு செய்ய வருவதாகவும் ஒப்புக்கொண்டனர்.

கருக்கலைப்பு மருந்துகள், உபகரணங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், கடையை இழுத்து மூடி சீல் வைத்தனர். கவிதா-பிரபு தம்பதியிடம் விசாரணை நடத்தியதில், கருக்கலைப்பு செய்து வந்த பெண் கவிதா என்பதும் 10ம் வகுப்பு வரை படித்தவர் என்றும், அவரது கணவர் மருந்து கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது.

இந்த தம்பதியினர் கடந்த 10 ஆண்டுகளாக  சட்ட விரோத கருக்கலைப்பு மையம் நடத்தி வந்ததும், இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கருக்கலைப்பு நடத்தி உள்ளதும் தெரிய வந்ததுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த பெட்டிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.