டில்லி,

ன்று முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல்கலாம் பிறந்தநாள்.  அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மரியாதை செலுத்தி புகழாரம் சூட்டினர்.

ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்த 1931ம் ஆண்டு அக்டோபர் 15ந்தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார். இன்று  அவரது 86வது பிறந்தநாள். கடின உழைப்பாளியான கலாம் இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று புகழ் பெற்றவர். இந்தியாவின் குடியரசு தலைவராகவும் தனது பதவி வகித்தவர். தனது வாழ்நாளை நாட்டுக்காக அர்பணித்தவர் கலாம்.   இன்று அவரது பிறந்தநாள்  நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அப்துல் கலாமின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிரியத்துக்குரிய ஆளுமையாக பலகோடி மக்களை ஊக்குவித்த நமது அன்பிற்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை இன்று நினைவுகூர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அப்துல்கலா-மை நினைவு படுத்தி வீடியோ ஓன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ:

https://twitter.com/narendramodi/status/919378366855286785

கலாமின் பிறந்தநாளையொட்டி  குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அப்துல் கலாமின் உருவப்படத்துக்கு தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.