அப்துல் கலாம் நினைவுநாள்! விஜயகாந்த் அஞ்சலி

Must read

சென்னை:
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் படத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார்.
vijayakanth
அப்துல்கலாமின் முதலாமாண்டு நினைவுநாள் நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. தேமுதிக அலுவலகத்தில் கலாமின் உருவப்படத்திற்கு விஜயகாந்த் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.
அப்துல்கலாம் நினைவுநாளையொட்டி   விஜயகாந்த் அறிக்கை:
மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், தமிழக மக்களால் மரியாதைக் குரியவராக போற்றப்படுவருமான ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தால் மாணவர்கள் தினமாக அறிவிக்கப்பட்ட நாள்.
நம் நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் முன்னேற்றத்தில் தான் உள்ளது என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர். தனது வாழ்க்கையை ஆசிரியராக தொடங்கி, பின் விஞ்ஞானியாக இருந்து நம் நாடு போற்றும் ஜனாதிபதியாக வாழ்ந்தவர்.
ஒரு மனிதர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக எளிமை, நேர்மை, கடின உழைப்பு ஆகியவற்றை பின்பற்றி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். தன் சீரிய சிந்தனையோடு அவர் எழுதிய பல புத்தகங்கள் நம் நாட்டிற்கு கிடைத்த பொக்கி‌ஷங்கள்.
உலக அரங்கில் நம் இந்திய நாடு வல்லரசாக வரவேண்டும் என்பதற்காக அவர் கண்ட கனவு, ஆற்றிய உரைகள், பணிகள் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெற்றிருக்கிறது. அம் மாமனிதர் நினைவு நாள், ஒவ்வொரு மாணவரும் நினைவு கூறவேண்டிய பொன்னாள்.
எ ன கூறியுள்ளார் விஜயகாந்த்.

More articles

Latest article