சேலம்,

லாம் இஸ்லாமியர் அல்ல என்றும், அவர் உறுப்பினரல்லாத ஆர்எஸ்எஸ் காரர் என்று தமிழக தவ்கீத் ஜமாத் கட்சி தலைவர் ஜெயினாலுபுதீன் கூறி உள்ளார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கலாம் நினைவிடத்தில் அமைந்துள்ள கலாம் வீணை வாசிப்பது போன்ற சிலை அருகே பகவத் கீதை வைக்கப்பட்டது விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழக தவ்கீத் ஜமாத் கட்சி தலைவர் ஜெயினாலுபுதீன் பேச்சு  சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

சமீபத்தில் ராமேஸ்வரம் அடுத்த பேக்கரும்பில் மறைந்த இந்திய ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாமுக்கு  நினைவிடம், அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை அப்துல் கலாமின் இரண்டாம் நினைவு நாளன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அப்துல்கலாம் அருங்காட்சியகத்தில் அப்துல் கலாம் வீணை வாசிப்பது போன்ற ஒரு சிலை நிறுவப்பட்டுள்ளது. அதில், சிலை அருகே  இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை வைக்கப்பட்டுள்ளது.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அப்துல் கலாம் மதசார்பற்றவர் என பெரும்பாலான அரசியல் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அப்துல் கலாம் அண்ணன் மகன் சலீம் என்பவர் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானைம், கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளையும் கொண்டு வந்த சிலைஅருகே வைத்தார்.

இது மேலும் சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சி போலீசில் புகார் கூறியது.

இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம்மொன்றில் பேசிய தமிழக தவ்கீத் ஜமாத் கட்சி தலைவர் ஜெயினாலுபுதீன் கூறியதாவது,

கலாம் ஜனாதிபதியாக பாரதியஜனதாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டபோதே, அவர் இஸ்லாத்தை கடை பிடிக்க தவறிவிட்டார் என்றும், அவர் ஆர்எஸ்எஸ் மதவாதியாக மாறிவிட்டார் என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், அப்துல் கலாம் விக்கிரகங்களுக்கு பிரார்த்தனை செய்தார் என்றும்,  நிர்வாண சாமியார்களை வணங்கினார் என்றும் என்றும் குற்றம் சாட்டியுள்ள ஜெயினாலாபுதீன், கலாம்  மிகச்சிறந்த அணு விஞ்ஞானி என்றும், அக்னி போன்ற ஏவுகணைகளை விண்ணுக்கு ஏவியவர் என்றும் பாராட்டினார்.

இருந்தாலும்,  அவர் இஸ்லாமியராக வாழவில்லை , அவர் உறுப்பினரல்லாத ஒரு ஆர்எஸ்எஸ் காரர்  என்று குற்றம் சாட்டினார்.

ஜெயினாலுபுதீனின் பேச்சு மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.