நெட்டிசன்:
*Dr.Safi* ,Pediatrician, Nagercoil .
Ranitidine எனும் வயிற்றுவலி மாத்திரை சர்ச்சையை தொடர்ந்து அடுத்த அதே அல்சர் சம்பந்தமான நோய்களுக்கு தரும் PPI inhibitors எனும் Pantoprazole வகை மருந்துகள் ஆபத்தானவை என வந்திருக்கும் அடுத்த சர்வதேச மருத்துவ சர்ச்சை !! இதில் உள்ள உண்மை என்ன !!!
முதலில் அல்சர் என்பது என்ன என பார்ப்போம்* ?
அல்சர் , ஆங்கிலத்தில் இதற்கு நம்முடைய உடலில் ஏற்படும் ஒருவகை புண் என அர்த்தம் , ஆனால் வயிற்றில் வரும் வலி மற்றும் அஜீரண கோளாறுகளை வழக்க வழியாக அனைவரும் சொல்லிடும் காரணி . அல்சர்.
ஆனால். வலிக்கும் வயறுக்கு பல காரணங்கள் உண்டு , அதை சரிவர ஆராய்ந்து தேடி , தடுத்து , குணப்படுத்த முற்படாமல், தமக்கு தாமே, மருத்துவம் செய்யும் பலரை நம்மால் காண முடியும், அவர்கள் பெரும்பாலும் எடுத்துக்கொள்ளும் வைத்தியங்கள்,
தயிர், பழ சாறு , கஞ்சி, காரம் குறைவான உணவு , நாட்டு மருந்துகள் , அதன் பின்னர் நண்பர், உறவினர் , அடுத்த வீட்டுக்காரர் , மருந்து கடைகாரர் , அல்லது யாரோ ஒருவர் சொன்னதால் அல்லது ஒருமுறை இதற்காக கண்ட மருத்துவர் பரிந்துரைத்த Rantac எனும் Ranitidine
அல்லது
Gelusil எனும் Antacid மேற்கூறிய இரண்டும் உண்ட பின்னரும் தீராத பொருட்டில் Pantoprazole எனும் PPI inhibitors இதை பலரும். காலை எழும்பி பல் தேய்க்கும் பழக்கம் இருக்கிறதோ இல்லையோ இந்த மாத்திரையை விழுங்கி விட்டு தான் மறு வேலை செய்ய நினைக்கின்றனர் !!
கேட்டால், அது போட்டா தான் சார் நாள் நிம்மதியா இருக்கு, இல்லாவிட்டால், ஒரே வயறுவலி, அஜீரணம், ஏப்பம், வயறு உப்சம், வாந்தி வருவது போல உணர்வு , அசௌகரியமான நிலை, கஷ்டமா இருக்கும் சார்
இதுபோல் பல வருடங்களாக தொடர்ந்து இந்த மருந்தை பலர் எடுத்து வருகின்றனர்
சரி, மேற்கூறிய பிரச்சினைகள் வருவதற்கு *என்ன காரணம் என பார்க்கலாம்* ?
மேற்கூறிய அறிகுறிகளில் பெரும்பாலான அறிகுறிகள் வர காரணம், Stomach Acidity எனும் வயறு அமிலத்தன்மை அதிகமாவதால் மட்டும் தான் , வயிற்றில் Acid ஆ*?? எதற்கு சார் வயிற்றில் அமிலம் ?
ஆம் , ஹைட்ரோக்ளோரிக் அமிலம் (HCl) எனும் மிக வீரியமான அமிலம் ஒரு நாளுக்கு சுமார் 160Mm அளவு நம் வயிற்றில் சுரக்கிறது. இது நாம் உண்ணும் உணவில் உள்ள நச்சு கிருமி , செரிமானம் அடைய முடியாத சில உணவுகளை செரிமானம் செய்ய என மொத்தத்தில் உணவுக்குழாய் முதல், குடல் பகுதிகள் வரை அதன் பாதுகாப்பிற்காகவும் ,நம் உடல் நன்மைக்காகவும் *இயற்கை கொடுத்த அரண் இந்த அமிலம்* !
இந்த அமில சுரப்பு அதிகமாகுதல் இந்த வலிக்கும் , அசௌகரியத்திற்கும் முதல் காரணம் ,
இதற்காக, நாம் எடுத்துக்கொள்ளும் இந்த தொடர் மருந்துகள் வயிற்றில் உள்ள பொட்டாஷியம் , ஹைட்ரொஜன் *ப்ரோட்டான் பம்ப் எனும் ஒரு செயற்பாட்டு விசையை தடுக்கிறது* ,
இதனால், சுரக்கப்படும் அமிலம் வயிறு பகுதிக்கும்., உணவுக்குழாயின் எல்லைக்கும் வராமல் குடல் பகுதிகளிலேயே தங்கும். இதனால் இந்த அறிகுறிகள் சில நேரங்களில் மருந்துகளால் மறைக்கப்படும் .! இது எந்த நோய்க்கும் தீர்வல்ல ! எந்த மருத்துவரும் இதை தீர்வாக சொல்லவும் மாட்டார்கள் ,
பொதுவாக, 2 வாரம் முதல், 2 மாதங்கள் வரை இந்த மருந்துகளை தொடர்ந்தோ , விட்டு விட்டோ , தான் வயறு சம்பந்தமாக படித்த Gastroentrology படித்த நிபுணர்களும் சொல்வர் . அப்படி குறையாவிட்டால், அதன் காரணம் தேடி குணப்படுத்திட அறிவுறுத்துவார்கள்
பொதுவாக ,
சில ரத்த பரிசோதனைகள் ,
ஸ்கேன் ,
Gastroscopy
Endoscopy செய்து
அதன்படி நோய் அறிந்து , அதன் பின்னர் அந்த நோய்க்கு தீர்வு காண முயல்வர் ..!!
ஆனால், நம்ம ஆள் அடுத்தடுத்த மருத்துவ செலவிற்கு பயந்தும் , அங்கு என்று பரிசோதனை செய்ய அலட்சியம் செய்தும், மருந்து கடைகளில் விக்ஸ் மாத்திரை போல எளிதாக கிடைக்கும் இந்த மாத்திரைகளை வாங்கி சர்வ சாதாரணமாய் உண்ண வேண்டியது. தேவைப்படும் அமிலங்களை சுரக்க விடாது , வயறு அமிலத்தன்மை இல்லாமல் , கணையத்தினை தேவைப்படும் செரிமான சுரப்பி நீரை(Digestive enzymes) சுரந்திட தூண்டிடாமல் , அப்படியே வருட கணக்கில் அகோர ஐட்டங்களை எல்லாம் உண்டு வந்தால், கேன்சரும் கிட்னியும் பாதிக்காமல் என்ன செய்யும் சொல்லுங்கள் !!
எவராவது அதை ஊட்டசத்து உணவு என்று கூறினாரா* ?
இல்லையே
மருந்து , மருந்தாக தானே உண்ண வேண்டும் ..!
இவ்வகை மருந்துகள் பரிந்துரை இன்றி அல்லது பரிந்துரை மீறி உண்டால் என்ன பிரச்சினைகள் எல்லாம் வரலாம் ??
சாதாரண தலைவலி, உமட்டல், ரத்த கொதிப்பு , கிட்னி செயலிழப்பு , எளிதாகும் எலும்பு முறிவு , க்லாஸ்ட்ரிடியம் (C.Difficle) பேதி நோய் , டிமென்ஷியா எனும் ஞாபக சக்தி குறைவு , மெக்னீசியம் குறைவு நோய் , வைட்டமின் பி 12 குறைவு நோய் , கேன்சர் பாதிப்புகள் என எண்ணிலடங்காத நோய்கள் வரலாம் ,
*மீண்டும்..*
*மீண்டும்*
*சொல்கிறேன்*….!!!!
மேற்கூறிய யாவும் மருந்தினால் வரும் நோய்கள் அல்ல..
*மருந்தினை*
*மருந்தாக உண்ணாத மடத்தனத்தால் வரும் நோய்கள்* ..!!
அல்சர் எனும் வயறு சம்பந்தமான பிரச்சினைகளை மருந்தே இல்லாமல் எப்படி தடுக்கலாம் ??
அடுத்த பதிவில் காண்போம் ..!
*மரு.சஃபி* ,
நாகர்கோவில்
வாழ்க முறையான மருத்துவ நலனுடன்