தென்ஆப்ரிக்கா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் சனிக்கிழமை தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 32.5 ஓவர்களுக்கு 85 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்க்ஸ்-யை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, 100.5 ஓவர்களில் 326 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியை விட 241 ரன்கள் முன்னிலை பெற்றது தென் ஆப்ரிக்க அணி.
2-ஆவது இன்னிங்ஸ்-ல் 60.1 ஓவர்களில் 161 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது ஆஸ்திரேலிய அணி. ஹேஸில்வுட் 6 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்கத் தரப்பில் அப்பாட் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளும், ரபாடா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஒரு இன்னிங்ஸ் மற்றும் 80 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி அபார வெற்றி பெற்றது. அப்பாட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன் மூலம், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றியுள்ளது.